Friday, August 13, 2004

காலேஜ் கவிதைகள்!

நான் காலேஜ் படித்த காலத்தில் (கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு), வகுப்பில், பொழுது போகாத நேரத்தில், என் ஆசிரியர்களைப் பற்றி, சக மாணவர்களின் அன்புத் தொல்லையால், எழுதிய "புது"க்கவிதைகள் சில!


கண்களிலே காம்போஸ் மாத்திரைகள்!
குரலிலே தாலாட்டுக் கவிதைகள்!
நிறத்திலே அமாவாசை நிலாக்கள்!
குணத்திலே முகமது பின் துக்ளக்!
இருபதாம் நூற்றாண்டில்
ஆப்பிரிக்க நாட்டு ஊமைப்படம்
காட்டும் எங்கள் அண்ணாமலை
கூலிக்கு மாரடிக்கும்ஒரு விநோத மனிதர்!!!



கவி வாழும் நாட்டிலே கற்பனைக்கு குறைவில்லை!
காமுகர்கள் நாட்டிலே கற்பிற்கு மதிப்பில்லை!
பணம் மிகுந்த வீட்டிலே அறிவிற்கு வேலையில்லை!
ராமமூர்த்தியின் வகுப்பிலே து(தூ)க்கத்திற்கு இடரில்லை!


ஆறுமுகம் அப்பாவி தான்! ஆனால்
எங்களைஅறுப்பதில் மாபாவி!
வெள்ளிக்கிழமை விரதம் சகஜம் தான் - ஆனால்
வெள்ளிக்கிழமை தோறும் வகுப்பு செல்லா விரதம்
என்னை அனுசரிக்க வைப்பது -
அ(ஆ)றுமுகத்தின் அன்புத் தொல்லை!
அவரது "Is it alright?" கேட்டே
நான் "All Wrong" ஆகி விட்டேன்
!

--- BALA

0 மறுமொழிகள்:

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails